பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்!!

 
tt

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.

tt

காஷ்மீரின் கத்துவாவில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 வீரர்கள் வீரமரணம், 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டம் பத்னோடா கிராமத்தில் நேற்று மாலை மச்செடி - கிண்ட்லி மல்கார் சாலையில் ரோந்து பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமாக ஈடுபடுவது போல் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது பதுங்கி  இருந்த பயங்கரவாதிகள் இத்தகைய தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.  பாதுகாப்பு படை நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் அருகில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடி உள்ளனர்.  

fff

கடந்த நான்கு வாரத்தில் கதுவா மாவட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கூறி, உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த தாக்குதலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.