சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 தோப்புக்கரணம் மட்டுமே தண்டனRape

 
5 Sit-Ups Is Punishment For Raping Girl

பீகாரில் 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மக்கள் விநோத தண்டனை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

Viral Video: 5 Sit-Ups Is Punishment For Raping Girl, 5, In Bihar Village


பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சாக்லேட் தருவதாக கூறி குழந்தையை தனது கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர், அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நபரை பிடித்த கிராம மக்கள் பஞ்சாயத்து முன் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த நபர், தான் சிறுமியை ஒத்துக்குப்புறமான இடத்திற்கு மட்டுமே அழைத்து சென்றதாகவும், பாலியல் தொல்லைக் கொடுக்கவில்லை, எனவே நான் கற்பழிப்பு குற்றவாளி இல்லை என்றும் கூறியுள்ளார். 


இதனைக் கேட்ட பஞ்சாயத்து தலைவர்கள், செய்த தவறுக்கு 5 தோப்புக்கரணம் போட்டுவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் மங்லா தெரிவித்தார்.