”பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் அரசு ” பேரவையில் காங்கிரஸ் முழக்கம்

 
karnataka

பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் அரசு என சட்டசபையில் காங்கிரஸ் பதாகைகளை கையில் ஏந்தி அவையில் முழக்கம் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது.

Karnataka Assembly polls: How parties fared in regions - Assembly Elections  2013 News


கர்நாடக மாநிலத்தில் கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதியம் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்ராமையா அவையில் பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் அரசு நடத்துவதாக குற்றம் சாட்டி இது குறித்து விவாதிக்க அனுமதி கோரினார். இதை ஏற்கக் கூடாது என இரு தரப்பு இடையே காரசார விவாதம் நடைபெற்று வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக 40% கமிஷன் அரசு என்று விமர்சிக்கும் பதாகைகளை கையில் ஏந்தி அவையில் காண்பித்து அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். 

பதிலுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் முழக்கங்களை எழுப்ப அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் பலமுறை இரு தரப்பினரையும் அமைதியாக இருக்க கோரிக்கை வைத்தும் இருவரும் தொடர்ந்து முழக்கமிட்டு வந்ததால் அவை நடவடிக்கையை சபாநாயகர் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.