தெரு நாய் கடித்து குதறி 4 வயது சிறுவன் பலி

 
dog

ஆந்திராவில் தெரு நாய் விரட்டி விரட்டி கடித்து குதறி நான்கு வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

4-Yr-Old Boy Mauled To Death By Stray Dog In Andhra Pradesh, Parents Protest Administrative Negligence

ஆந்திர மாநிலம்  குண்டூர் ஸ்வர்ண பாரதி நகரைச் சேர்ந்த நாகராஜு - ராணி தம்பதியினரின்  நான்கு வயது மகன் ஐசக்குடன் உள்ளூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நாகராஜு பணிக்கு சென்ற நிலையில் ராணி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்க, ஐசக் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஐசக் மீது பாய்ந்து கடித்து குதறி கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது. அங்கிருந்தவர்கள் அரும்பாடு பட்டு சிறுவன் ஐசைகை தெரு நாயிடமிருந்து மீட்டு காப்பாற்றினர்.

தொடர்ந்து அவனை சிகிச்சைக்காக குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஐசக் பரிதாபமாக மரணமடைந்தான். தெரு நாய்கள் தாக்குதலால் தினந்தோறும் எதே ஒரு இடத்தில் தாக்குதல் உயிரிழப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.