இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்?- 4 தீவிரவாதிகள் கைது

 
தீவிரவாதிகள்

ஹரியானா மாநிலத்தில் அதிக அளவு வெடி பொருட்களுடன் 4 தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளனர்.

BREAKING: 4 Suspected Khalistani Terrorists Arrested in Karnal, Explosives  Recovered

உளவுத்துறை எச்சரிகையின் படி  ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில், பஞ்சாப் , ஹரியானா காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பஸ்தாரா சுங்க சாவடி அருகே இன்னோவோ காரில் சந்தேகிக்கும் விதமாக 4 பேர் அதிக அளவிலான வெடி மருந்துகள் மற்றும் துப்பாக்கிகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடுக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் கார்னல் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.  தேடப்படும் பயங்கரவாதி ரிண்டா-வுடன் இவர்கள் 4 பெரும் தொடர்ப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. 

வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மத்திய அரசின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என அடையாளம் காணபட்டுள்ளதாக கர்னால் காவல் கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா தெரிவிக்கிறார். மேலும், பாகிஸ்தானில் இருந்து ஃபெரோஸ்பூருக்கு காலிஸ்தான் தீவிரவாதி ரிண்டா மூலம் ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. எல்லையில் பெற்று கொண்ட 4 பெரும் அதனை மகாராஷ்டிரா மாநிலம் கொண்டு செல்லும் வழியில் உளவுத்துறை கைது செய்துள்ளது. 

இதுதொடர்பாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவிக்கையில், 4 தீவிரவாதிகள் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகே முழு தகவல்கள் தெரியவரும் எனக் கூறினார்.