3ம் கட்ட தேர்தல் - 61.45% வாக்குப்பதிவு

 
election

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி, 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்பின், நள்ளிரவு 12 மணிக்கு வெளியான தகவலில், தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் 69.46 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

election

நாடு முழுவதும் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களின் வசதிக்காக ஒரு லட்சத்துக்கு 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குஜராத் மாநிலத்தில் ஒரே கட்டமாக 25 தொகுதிகளிலும், கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதேபோல்
மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

election commision

இந்நிலையில் மேற்கு வங்கம் 73.93%, மத்திய பிரதேசம் 63.09%, உத்திர பிரதேசம் 57.34%, கோவா 72.27%, சட்டீஸ்கர் 66.99%, அசாம் 75.26%,  பிகார் 56.55%,  குஜராத் 56.76%,  கர்நாடகா 67.76%,  மகாராஷ்டிரா 54.77% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.