வட மாநிலத்தை சூறையாடும் மின்னல்… உபியிலும் 37 பேர் உயிரிழப்பு!

 

வட மாநிலத்தை சூறையாடும் மின்னல்… உபியிலும் 37 பேர் உயிரிழப்பு!

பெரும்பாலான வட மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இடி, மின்னலும் ஏற்படுவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ராஜஸ்தானில் நேற்று அமர் அரண்மனையில் செல்பி எடுக்கும்போது மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 9 பேர் மரணமடைந்துள்ளனர். இச்சூழலில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்திலும் 37 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தை சூறையாடும் மின்னல்… உபியிலும் 37 பேர் உயிரிழப்பு!

பிரக்யராஜ் மாவட்டத்தில் மட்டுமே 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கான்பூர், பதேபூர் மாவட்டங்களில் தலா ஐந்து பேர் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலரும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளே. இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மழை பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கவும் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

வட மாநிலத்தை சூறையாடும் மின்னல்… உபியிலும் 37 பேர் உயிரிழப்பு!

இரு மாநிலத்திலும் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.