இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா - 4ஆம் அலையின் அறிகுறியா?

 
corona

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,688   பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கிவிட்டது. இதனால் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் திரும்ப பெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது.தமிழகம், உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா உயர்ந்துள்ளதால் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

india corona

இந்நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம்  3,303  பேருக்கும், நேற்று   3,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதன் மூலம் இந்தியாவில் நேற்றை காட்டிலும் கொரோனா அதிகரித்துள்ளதுடன், கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 864  ஆக அதிகரித்துள்ளது. 

corona

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 50 பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,23, 803 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 33,377 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது வரை இந்தியாவில்  18,684 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இதுவரை 188.89 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.