ஓஎன்ஜிசி- யில் 3,614 பணியிடங்கள்.. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

 
ONGC-ல் 3614 காலியிடங்கள்


இந்தியா முழுவதும்  3614 அப்ரண்டிஸ் பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  ONGC அறிவித்துள்ளது.

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தில்  ஆண்டுதோறும் அப்ரண்டிஸ் பணிகளுக்காக  ஆட்சேர்ப்பு நடத்தப்படும்.  அந்தவகையில் நடப்பாண்டுக்கான  அப்ரண்டிஸ் சட்டம் 1961ன் கீழ் பல்வேறு அப்ரண்டிஸ் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேறப்படுகின்றன.  இதன் மூலம் மொத்தம் 3614 காலியிடங்கள் நிரப்பப்படும்.  கடந்த 27 ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதன்படி விண்ணப்பப்பதிவும் ஏப்ரல் 27 ஆம் தேதி காலை 11 மணி முதல் தொடங்கியிருக்கிறது.  

ONGC-ல் 3614 காலியிடங்கள்

மொத்த காலிப்பணியிடங்கள் :   3614

வயது வரம்பு : மே 15, 2022 தேதியின்படி 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :  மே 15, 2022 மாலை 6:00 மணி

முடிவு வெளியாகும் தேதி :  23 மே 2022

ONGC-ல் 3614 காலியிடங்கள்

தேர்வு செய்யப்படும் முறை : தகுதித்தேர்வு மற்றும் பெறப்பட்ட மெரிட் ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான தேர்வுகள் இருக்கும்.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் சம்பளம் குறித்த மேலும் விவரங்களுக்கு ஓஎன்ஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான ongcindia.com தளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ongcindia.com இணையதளத்திலேயே  ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.