ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 36 பேர் உயிரிழப்பு

 
Jammu kashmir bus accident

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். 

36 killed as bus falls into gorge in Jammu and Kashmir's Doda district |  India News - The Indian Express

ஜம்மு காஷ்மீரின் அசார் தோடா என்ற இடத்தில் பள்ளத்தில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 55 பயணிகளுடன் சென்ற பேருந்து, சாலையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் விழுந்தது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

Jammu and Kashmir Bus Accident: 36 Killed, Six Critical as Bus Plunges into  Deep Gorge in Doda (Watch Video) | LatestLY

விபத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தனர். இதேபோல் பேருந்து விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடந்த பேருந்து வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.