ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயேவா… ஒரே கல்லூரியில் 32 மாணவர்களுக்கு கொரோனா!

 

ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயேவா… ஒரே கல்லூரியில் 32 மாணவர்களுக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனாவின் தீவிரம் அடங்கியிருப்பதால் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர், கொரோனா இரண்டாம் அலையே இன்னும் முடிவடையவில்லை என்பதால் பள்ளிகளைத் திறப்பதில் நிதானம் காட்ட வேண்டும் என்றார். அவரின் கருத்து கொஞ்சம் அச்சத்தை எழுப்பியது.

ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயேவா… ஒரே கல்லூரியில் 32 மாணவர்களுக்கு கொரோனா!

ஆனால் அவர் எச்சரித்தது போல கர்நாடகாவில் கொரோனா வேலையைக் காட்டியிருக்கிறது. கர்நாடகாவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெரிய மாணவர்களுக்கே வகுப்புகள் ஆரம்பித்துள்ளன. கர்நாடகாவில் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் சிலர் அண்மையில் கேரளா சென்று வந்துள்ளனர்.

ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளயேவா… ஒரே கல்லூரியில் 32 மாணவர்களுக்கு கொரோனா!

அங்கிருந்து இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை கேரளா செல்ல அனுமதித்த கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. செப்.6ஆம் தேதி முதல் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் இன்று தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.