டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா..

 
டெல்லி காவல்துறை

டெல்லி காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் உள்பட 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  மின்னல் வேகத்தில் அதிகரித்து  வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  1லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  டெல்லியை பொறுத்தவரை புதிதாக மேலும் 22,751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24  மணி நேரத்தில்  10,179 பேர் குணமடைந்துள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை 14 லட்சத்து 63 ஆயிரத்து 837 பேர் கொரோனாவில்  இருந்து குணமடைந்துள்ளனர்.

ஆல்பா கொரோனா

தற்போது  60,733 பேர்  மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமைப்படுத்தலிலும் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தேஎபோல் இந்தியாவில்  ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக 3 வது இடத்தில்  டெல்லி உள்ளது.. அங்கு  513 பேர் இதுவரை  ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு தினசரி அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.  அந்தவகையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை

இந்த தகவலை டெல்லி காவல்துறை உறுதி படுத்தியுள்ளது. இந்தச் சூழலிலும் டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மக்கள் முககக்வசம் அணிவதை  முறையாக கடைபிடித்தால், ஊரடங்கு முடிவை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை  என்றும் அவர் கூறியிருக்கிறார்.