30 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; ஆறுதல் அளிக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

 

30 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; ஆறுதல் அளிக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,941 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு சற்று தணிந்திருந்த நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. பாதிப்பு குறைவது போல குறைந்து மூன்றாவது அலை உருவெடுக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே போல, வரும் அக்டோபர் மாதத்தில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில், மூன்றாவது அலைக்கான ஆரம்பக்கட்டத்தில் இந்தியா இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

30 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; ஆறுதல் அளிக்கும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 36,275 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாகவும் 350 பேர் உயிரிழந்ததாகவும் 3,70,640 பேர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு மேலாகவே பதிவாகி வந்தது. இதனால், மூன்றாவது அலை வரப் போகிறதோ என்ற அச்சம் எழுந்தது. இன்று பாதிப்பு 30 ஆயிரமாக குறைந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. கொரோனா மரணங்களும் இன்று குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.