3 மாநில தேர்தல் முடிவுகள் : நாகாலாந்து , திரிபுராவில் பாஜக முன்னிலை..

 
3 மாநில தேர்தல் முடிவுகள் : நாகாலாந்து , திரிபுராவில் பாஜக முன்னிலை..


மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாகாலாந்து, திரிபுராவில் பாஜக முன்னிலை வகிக்கிறது.  

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன.  

   வாக்கு எண்ணிக்கை

இதில் திரிபுரா மாநிலத்தில் ஆளும்  பாஜக- திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  அதேபோல்  நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  மேகாலயாவை பொறுத்தவரை  ஆளும் தேசிய மக்கள் கட்சி 10க்கும்  மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 7 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.பி.பி கட்சி 18 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளது.