298 ஆனது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!  – ஒத்துழைப்பு அளிக்க மோடி வேண்டுகோள்

298 ஆனது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!  – ஒத்துழைப்பு அளிக்க மோடி வேண்டுகோள்

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று பிற்பகல் 2.30 மணி வரையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 298 ஆனது. இதில் நான்கு பேர் உயிரிழந்ததும், 22 பேர் டிஸ்சார்ஜ் ஆனதும் அடங்கும். 

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மணிக்கு மணி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று பிற்பகல் 2.30 மணி வரையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 298 ஆனது. இதில் நான்கு பேர் உயிரிழந்ததும், 22 பேர் டிஸ்சார்ஜ் ஆனதும் அடங்கும். 

coronavirus-india-90.jpg

இதற்கிடையே பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “பயப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறக்க வேண்டாம். வீட்டிலேயே இருப்பது மட்டும் முக்கியம் இல்லை, உங்கள் ஊரிலேயே இருப்பதும் நல்லது. தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவாது. இந்த நேரத்தில் நம்முடைய சிறிய சிறிய நடவடிக்கையும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மருத்துவர்கள், அதிகாரிகள் சொன்ன பரிந்துரையைப் பின்பற்றுங்கள். யாரை எல்லாம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்களோ, அவர்கள் அதை பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். இது உங்கள் குடும்பத்தினர் நண்பர்களைப் பாதுகாக்க உதவும்” என்று கூறியுள்ளார்.