கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி; லட்சக்கணக்கில் அலைமோதும் கூட்டம்

கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி; லட்சக்கணக்கில் அலைமோதும் கூட்டம்

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் என்று ஆந்திராவை மட்டுமல்லாது பக்கத்து மாநிலங்களையும் பரபரப்பாக்கியவர் ஆனந்தய்யா. இந்த லேகியத்திற்கு அரசு இடைக்கால தடை விதித்திருந்ததால் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகின. ஆய்வுகளுக்கு பின்னர் இந்த லேகியத்திற்கு அரசு அனுமதி அளித்திருப்பதால், தற்போது மீண்டும் கூட்டம் லட்சக்கணக்கில் அலைமோதுகிறது ஆனந்தய்யாவின் கிளினிக்கில்.

கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி; லட்சக்கணக்கில் அலைமோதும் கூட்டம்

ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் போனஜி ஆனந்தய்யா ஆயுர்வேத சிகிச்சை பார்த்து வருகிறார். பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து அவர் ஆனந்தய்யா, இந்த கொரோனா தொற்றுக்கு ஒரு கத்தரிக்காய் லேகியமும், கண்ணில் விடும் சொட்டு மருந்தும் தயாரித்தார். இந்த லேகியமும் சொட்டு மருந்தும் ஓரளவுக்கு நல்ல பலனை தந்ததால், ஆனந்தய்யாவின் கிளினிக்கிற்கு மக்கள் அலைமோதினர்.

கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி; லட்சக்கணக்கில் அலைமோதும் கூட்டம்

லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து பல மைல் தூரத்திற்கு கியூவில் நின்று மருந்து வாங்கி சிகிச்சை பெற்று சென்றனர்.

ஆனந்தய்யா அளிக்கும் இந்த சிகிச்சை குறித்து சிலர் சந்தேகம் எழுப்பியதால், இந்த மருந்தை அனுப்பி ஆய்வு செய்யச்சொன்னார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆய்வு முடியும் வரை இந்த மருத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி; லட்சக்கணக்கில் அலைமோதும் கூட்டம்

இதனால், லேகியமும் சொட்டு மருந்தும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகிறது என்கிற புகாரும் அரசுக்கு சென்றது.

கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி; லட்சக்கணக்கில் அலைமோதும் கூட்டம்

ஆயுஸ் அமைச்சகம், ஐ.சி.எம்.ஆர்., திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில், தேன், வால் மிளகுடன் கத்தரிக்காய் கூழ் கலந்த தயாரிக்கப்படும் இந்தமருந்தில், ஆனந்தய்யாசின் லேகிய சிகிச்சையில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்றும், மூலிகைகளை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கத்தரிக்காய் லேகியத்திற்கு அனுமதி அளித்திருக்கிறார் ஜெகன்மோகன்ரெட்டி. கண்ணில் விடும் சொட்டு மருந்துக்கு மட்டும் அனுமதி அளிக்கவில்லை.

கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி; லட்சக்கணக்கில் அலைமோதும் கூட்டம்

கத்தரிக்காய் லேகியத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் முன்பை விடவும் இப்போது கூட்டம் அதிகமாக அலைமோதுகிறது.