ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு.. கடும் குளிரால் வந்த வினை?? தவிக்கும் மக்கள்..

 
ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு.. கடும் குளிரால் வந்த வினை?? தவிக்கும் மக்கள்..

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரால், உத்தர பிரதேசத்தில்  கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர்.

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.  பனிப்பொழிவை ஒட்டி கடும் குளிர்வாட்டி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. குளிர் கடுமையாக இருப்பதால் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்போருக்கு நிரந்தர தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் மக்கள் கடுமையான குளிரை எதிர்கொண்டு வரும் சூழலில், நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலும் 5 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு.. கடும் குளிரால் வந்த வினை?? தவிக்கும் மக்கள்..

இதில் கடந்த 24 மணி நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கிழக்குப் பகுதியில் சில இடங்களிலும் வென்பனி போர்த்தியது போல் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில்,  பலருக்கும் மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்த போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியது. அதன்படி, கான்பூரில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக வியாழக்கிழமை (5ம்தேதி) 25 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கடும் குளிரால் ரத்த  அழுத்த அதிகரிப்பு மற்றும் ரத்த உறைவதால் ஏற்படும் மாரடைப்பு, மூளை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும் என்று கருதக்கூடாது, சிறார்களுக்கும் ஏற்படும் என்றும்  லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை. பேராசிரியர் தெரிவித்துள்ளார். வயது வித்தியாசமின்றி அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் அவர்  அறிவுறுத்தியுள்ளார்.