காதலி விட்டு சென்றதற்கு நீயே காரணம்... தோழியை விடுதிக்குள் புகுந்து கொன்ற இளைஞர்! பகீர் பின்னணி

பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில் பெண்களுக்கான பிஜிகுள் கடந்த 23 ஆம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்த பீகாரை சேர்ந்த கிருத்தி குமாரி (24) என்ற பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கான சிசிடிவி காட்சி இன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை மூன்று தனிப்படைகளை அமைத்து கொலையாளியை பிடிக்க தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர் போபால் நகரை சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்துள்ளது. அபிஷேக் சில வருடங்களுக்கு முன்பு தனது கல்லூரி படிப்பை முடித்து பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது கரீமா ராத்தோட் என்ற பெண் உடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திடீரென அபிஷேக் தனது பணியை விட்டுவிட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றத் துவங்கியுள்ளார். இதற்கு பலமுறை கரீமா ராத்தோட் கண்டித்துள்ளார். தொடர்ந்து வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று காதலி கூறியதை ஏற்க மறுக்காமல் தொடர்ந்து அபிஷேக் ஊர் சுற்றி வந்ததால் அவரின் காதலை கரீமா ராத்தோட் முறித்து கொண்டுள்ளார். கரீமா ராத்தோட் மற்றும் அபிஷேக் ஆகிய இருவருக்குள் பலமுறை மோதல் வந்த போது கரீமாவுக்கு ஆதரவாக அவரது தோழி கிருத்தி குமாரி இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே பலமுறை இவர் சமாதான பேச்சுவார்த்தையும் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
லேடீஸ் பிஜி-க்குள் புகுந்து.. இளம் பெண்ணை கழுத்தறுத்த கொடூரன் ரத்தம் சொட்ட உட்கார்ந்த படி இறந்த சோகம்.. பதறவைக்கும் காட்சி #bangalore #ladiespg #ladieshostel pic.twitter.com/mSEOFeSYQJ
— Thanthi TV (@ThanthiTV) July 26, 2024
கரீமா தனது காதலனை விட்டுப் பிரிய காரணம் கிருத்தி குமாரி தான் என்று அபிஷேக் மனதில் எண்ணம் தோன்றியுள்ளது. தனது காதலனை விட்டு கரீமா பிரிந்த நிலையில் அவர் தனது தோழி கிருத்தி உடன் இருந்த பிஜியை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அபிஷேக்கின் அழைப்புகளையும் ஏற்க மறுத்துவிட்டார். சில வாரங்களுக்குப் பிறகு கடந்த 23 ஆம் தேதி கரீமா தனது தோழி கிருத்தியை சந்திக்க அவரது கோரமங்காள வில் உள்ள பிஜிக்கு இரவு நேரத்தில் வந்துள்ளார். தோழிகள் இருவரும் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் இருப்பதை அபிஷேக் அறிந்து கொண்டு அங்கு சென்றுள்ளார் அப்பொழுது கரீமா உணவு அருந்த மேல்மாடிக்கு சென்றிருந்த நிலையில் மூன்றாவது மாடியில் கிருத்தி மட்டும் தனியாக இருந்துள்ளார். கிருத்தியை அறையில் கண்ட அபிஷேக் அவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார். தற்பொழுது அவரை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.