#BREAKING சாக்லெட் சாப்பிட்ட 23 வயது பெண் மரணம்!
பெங்களூருவில் 23 வயது பெண் ஒருவர் சாக்லேட் சாப்பிட்ட பிறகு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறை கூறியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் ஒரு நண்பருடன் சுற்றுலா செல்வதற்காக செப்டம்பர் 11 அன்று சக்லேஷ்பூரில் உள்ள அந்த விடுதிக்கு வந்திருந்தார். அங்கு குளிக்கச் செல்வதற்கு முன்பு அவர் சாக்லேட் சாப்பிட்டுள்ளார். குளியலறையை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக காவல்துறை கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் ஹெட்டூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து சக்லேஷ்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருடன் சென்ற ரகு மற்றும் தர்ஷன் ஆகிய இருவரிடமும் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.
பெங்களூருவிலிருந்து சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாசனுக்கு வர்ஷா பயணம் செல்வது குறித்து அவரது பெற்றோருக்கும் தெரியும் என்றும், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய வர்ஷாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.

