"2024-ல் புதிய இந்தியாவை படைப்போம்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 
tn

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Parliament

 பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  தாக்கல் செய்கிறார். பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.

Parliament

இந்நிலையில்  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர். மோடி அரசின் கீழ் இவர் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். 

அப்போது பேசிய அவர் , சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

tn

ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2024-ல் புதிய இந்தியாவை படைப்போம். “நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.  முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.