சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சிறிது குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, என்.டி.பி.சி., டாடா ஸ்டீல், டைட்டன் மற்றும் இன்போசிஸ் ஆகிய 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாருதி சுசுகி இந்தியா உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,088 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,628 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 147 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.151.39 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.54 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.15 புள்ளிகள் சரிந்து 37,877.34 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 122.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,178.40 புள்ளிகளில் முடிவுற்றது.