2019-ம் ஆண்டே 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தம்- மத்திய அரசு

 
2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

2018 ஆண்டுக்கு பின் இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ரூ.500 , ரூ.2000 கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்..

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலைகுலையச் செய்யும் வகையிலான பணமதிழப்பு நடவடிக்கை குறித்து அறிவித்தார். அதன்படி, ஒரே இரவில்  ரூ.500 மற்றும் ரூ1,000 நோட்டுகள் செல்லாமல் போனது. அதற்கு மாற்றாஅக புதிதாக 2000 ரூபாய் நோட்டும், புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டும் அமல்படுத்தப்பட்டன. அதன்பின்னர் பழைய   ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றுவதற்காக  பொதுமக்கள் ஏடிஎம், வங்கி வாசல்களில் காத்துக்கிடந்த கொடுமைகளை சொல்லி மாளாதது. கள்ளநோட்டுக்களை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதாக மோடி அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அண்மையில் ரிசர்வ் வங்கி,  2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கம் 54% , 500 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் 102 % அதிகரித்திருப்பதாக கூறியது. 

2000 ரூபாய் நோட்டு

இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் பங்கஜ் குமார் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2018 ஆண்டுக்கு பின் இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்படாது என்றும் விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமின்றி 2019 ஆண்டே 2,000 ஆயிரம் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதால், இதற்கு பிறகும் அதனை அச்சிடும் திட்டம் இல்லை, புழக்கத்தில் உள்ள நோட்டுகளே போதும் என கூறினார்.