தாயை காத்த சிவனுக்கு 8,000 கிலோமீட்டர் ஓடி நேர்த்திக்கடன் செலுத்தும் 19 வயது மகன்

 
s

தாயை காத்த சிவனுக்கு 8,000 கிலோமீட்டர் ஓடியே 12 ஜோதிர்லிங்க தலங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் 19 வயது மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த மோனு மெட்டூர்பாலா (Monu Meturbala) என்ற 19 வயது இளைஞர், தனது தாயின் உடல்நலம் குணமடைந்ததற்காக சிவபெருமானுக்கு நேர்த்திக்கடனாக இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கும் சுமார் 8,000 கிலோமீட்டர் ஓடியே பயணம் மேற்கொண்டு வரும் நெகிழ்ச்சியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மோனுவின் தாயார் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைந்தால் இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கும் ஓடியே சென்று நேர்த்திக்கடன் செலுத்துவதாக சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டார். தாய் முழுமையாகக் குணமடைந்ததைத் தொடர்ந்து, தனது நேர்த்திக்கடனைச் செலுத்த 2026 மார்ச் 15 அன்று பீகாரின் அராரியா (Araria) மாவட்டத்தில் இருந்து ஓடத் தொடங்கினார். இந்த ஆன்மீகப் பயணத்திற்காக அவர் தினமும் சராசரியாக 50 கிலோமீட்டர் தூரம் ஓடி வருகிறார். இதுவரை அவர் சுமார் 8,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதோடு, 5 ஜோதிர்லிங்கத் தலங்களைத் தரிசித்துள்ளார். ஜார்க்கண்டில் உள்ள புகழ்பெற்ற பாபா பைத்யநாத் தாம் கோயிலில் இருந்து இவர் தனது பயணத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.