கொரோனா பயத்தால் 18 மாதங்களாக வெளியே வராத குடும்பம் – பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி

 

கொரோனா பயத்தால் 18 மாதங்களாக வெளியே வராத குடும்பம் – பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி

முதல்வர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால் சம்பந்தப்பட்டவரிடம் படிவத்தில் பூர்த்து செய்து கையெழுத்து வாங்குவதற்காக, ஆந்திர மாநிலம் கோதாவரி ராஜோலு கிராமத்திற்கு சென்றனர் அதிகாரிகள்.

கொரோனா பயத்தால் 18 மாதங்களாக வெளியே வராத குடும்பம் – பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி

சம்பந்தப்பட்ட விவசாயி வீட்டின் கதவை தட்டியபோது யாரும் கதவை திறக்கவில்லை. நெடுநேரமாக தட்டியும் உள்ளே இருந்துகொண்டு யாரும் கதவை திறக்காததால், அதிகாரிகள் ஆத்திரம் அடைந்தனர்.

அப்போது அக்கம் பக்கத்தினர் வந்து, நீங்க எவ்வளவு நேரம் தட்டினாலும் கதவு திறக்காது. 18 மாதங்களுக்கு மேல் இப்படியேதான் பூட்டி கிடக்குது என்று சொல்ல அதிகாரிகள் அதிர்ந்தனர்.

எதற்காக இத்தனை காலம் கதவு பூட்டியே கிடக்குது? உள்ளே யாரும் இல்லையா? என்று கேட்டபோது, விவசாய வேலை பார்த்து வந்த குடும்ப தலைவருக்கு 35 வயசு இருக்கும். மனைவியும் உள்ளேதான் இருக்கிறார். அவர்களோட ஒரு ஆண் பிள்ளையும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளேதான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கொரோனா பயத்தால் 18 மாதங்களாக வெளியே வராத குடும்பம் – பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி

அப்புறம் ஏன் கதவை திறக்காமல் உள்ளேயே இருக்கிறார்கள் என்று கேட்க, கொரோனா வந்தது முதல் வெளியே வந்தால் இறந்துவிடுவோம் என்று பயந்து உள்ளேயே இருக்கிறார்கள். இதுவரைக்கும் யாரும் வெளியே வந்ததே இல்லை. அந்த கதவு எப்போதாவது திறக்கும். அந்த சிறுவன் மட்டும் ரேச்ன் கடைக்கும் சென்று பொருள் வாங்கிட்டு செல்வான். அவனும் யாருடனும் பேசமாட்டான் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதையடுத்து அதிகாரிகள் போலீசுக்கு போன் செய்து தகவல் சொல்ல, போலீசார் வந்து தட்டியும் கதவு திறக்காததால், சந்தேகத்தில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்கள். அங்கே பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. வீட்டில் இருந்தவர்கள் சரியான சாப்பாடு இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் மெலிந்து போய், நோய்வாய்ப்பட்டு கிடந்துள்ளனர்.

அந்த ஐந்து பேரையும் வலுக்கட்டாயமாக கொண்டு போய் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் போலீசார்.