பாஜகவில் மீண்டும் இணைந்தார் விஜயசாந்தி

 

பாஜகவில் மீண்டும் இணைந்தார் விஜயசாந்தி

காங்கிரசிலிருந்து விலகிய நடிகை விஜயசாந்தி இன்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

நேற்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் விஜயசாந்தி. இதனால் அவர் இன்று டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என்று தகவல்கள் வெளியானது. அதன்படியே அமித்ஷா முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் மீண்டும் இணைந்தார் விஜயசாந்தி

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட விஜயசாந்தி, 1998ல் பாஜகவில் இணைந்து மகளிரணி செயலாளர் ஆனார். பின்னர் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்து 2009 முதல் 2014 வரையிலும் மேதக் தொகுதியின் எம்.பியாக இருந்தார்.

பாஜகவில் மீண்டும் இணைந்தார் விஜயசாந்தி

2014 முதல் காங்கிரஸில் இருந்து வந்த விஜயசாந்தி, சமீப காலங்களாகவே கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்து வந்தார். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

அண்மையில் நடிகை குஷ்பு காங்கிரசிலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது போலவே, விஜயசாந்தியும் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.