1,800 காவலர்களுக்கு கொரோனா.. டெல்லி போலீஸ் அதிர்ச்சித் தகவல்...

 
டெல்லி காவல்துறை

டெல்லியில்  கடந்த 10 நாட்களுக்குள்ளாக  சுமார் 1800 க்கும் அதிகமான காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இதனையடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி நிம்மதிப் பெருமூச்சு வீட்டிலிருந்த நிலையில்,  அதற்குள்ளாக கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கிவிட்டது. கூடவே  இலவச இணைப்பாக உருமாறிய ஒமைக்ரானும் தன் பங்கிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லி காவல்துறை

இந்த வைரஸின் கோர தாண்டவத்திற்கு அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர், மாணவர்கள் ,  காவல் துறையினர்  என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியில் அதகளவு காவல் துறையினர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை  தாண்டி பதிவாகி வருகிறது. இதேபோல் ஒமைரான் பாதிப்பிலும் நாட்டிலேயே டெல்லி 3வது இடத்தில் உள்ளது. அங்கு 546 பேர் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனா

இந்நிலையில், டெல்லி காவல்துறையில்  பணியாற்றி வரும் 1,800 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லி கூடுதல் கமிஷனர் சின்மோய் பிஸ்வால், காவல்துறை செய்தித்தொடர்பாளர், போலீசார் என 1,000 பேர் ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் அனைவரும் தற்போது வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.