நாய் கடி தடுப்பூசியை செலுத்திய சில நிமிடங்களில் சிறுமி பலி

 
s

மகாராஷ்டிராவில் நாய் கடி தடுப்பூசியை செலுத்திய சில நிமிடங்களிலேயே 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள ஒரு தடுப்பூசி முகாமில், வழக்கமான நாய் கடி தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிறிது நேரத்திலேயே 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். நாசிக் மாநகராட்சியின்படி, அந்த இளம் பெண் வீட்டிற்குச் செல்லும் வழியில் தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறையினர் பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணையை முடித்துள்ளனர். மேலும் தடுப்பூசி மாதிரி ஆய்வகப் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் மரணத்திற்கான துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 120 பேர் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதாகவும், அதே தடுப்பூசி இருப்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.