ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி - நிவாரணம் அறிவிப்பு

 
tn

மிசோரமில்  ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 

tn

மிசோரம் மாநிலம் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

pm modi

 இந்நிலையில் மிசோரம் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.