ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..

 
bank

 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

பணம் செலுத்துவது, எடுப்பது,  கடன்பெறுவது என பெரும்பாலும் பணத்தேவைக்காக மக்கள் வங்கியை நாடுவது வழக்கம்.. ஆனால்  வங்கிகளுக்கு   இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை,  நான்காவது சனி,  மற்றும் மாநில விடுமுறைகள் , உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது . அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதனால்  வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.   

bank

அந்த வகையில் ஜூலை மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், ஆகஸ்ட்  மாதத்திற்கான  விடுமுறை பட்டியலில் பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை என கணக்கிட்டு விடுமுறை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.    எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை பார்க்கலாம்.

“ஆகஸ்ட் 1 – துருபகா ஷீ-ஜி திருவிழா ( காங்டாக்கில் அனைத்து வங்கிகளும் மூடப்படும்)

ஆகஸ்ட் 7 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஆகஸ்ட் 8 – முஹர்ரம் பண்டிகை ( முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.)

ஆகஸ்ட் 9 – முஹர்ரம் பண்டிகை ( பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

ஆகஸ்ட் 11 – ரக்‌ஷா பந்தன் ( சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்)

ஆகஸ்ட் 13 –  இரண்டாவது சனிக்கிழமை  

ஆகஸ்ட் 14 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் ( நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)

bank

ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு ( மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்)

ஆகஸ்ட் 18 – ஜன்மாஷ்டமி ( நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்)

ஆகஸ்ட் 21 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஆகஸ்ட் 27 – நான்காவது சனிக்கிழமை.

ஆகஸ்ட் 28 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

ஆகஸ்ட் 29 – ஹர்தாலிகா தீஜ் அனுசரிக்கும் விதமாக சத்தீஸ்கர் மற்றும் சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 31, 2022 – விநாயகர் சதுர்த்தி ( குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வங்கி விடுமுறை )”

ஆகஸ்ட்  மாதத்தில்  4 ஞாயிறு, 2 சனிக்கிழமை என வார இறுதி நாட்கள் விடுமுறை மட்டுமே 6  நாட்களாகும்..  அதன்படி பண்டிகை விடுமுறைகளை சேர்த்து மொத்தம்  16 நாட்கள்  வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.