சுற்றுலா படகு கவிழ்ந்து 14 பேர் பலி - 18 பேர் மீது வழக்குப்பதிவு

 
tn

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து 14 பேர் பலியான நிலையில்  18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

tn

குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி என்ற ஏரிக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலாக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஒரு படகில் 27 மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் பயணித்ததாக தெரிகிறது . அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 14 மாணவர்கள்,  இரண்டு ஆசிரியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  10 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  மாணவர்கள் படகு பயணத்தின் போது உயிர் காக்கும் கவச உடை எதுவும் அணியவில்லை என்று கூறப்படுகிறது.  பள்ளி மாணவர்கள் உயிரிழப்புக்கு குடியரசுத் தலைவர்,  பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் பேரிடர் நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் , மாநில அரசு சார்பில் பல நான்கு லட்சமும் நிதி உதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tnt

இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.