கர்நாடகாவில் 14 அமைச்சர்கள் படுதோல்வி

 
Karnataka Election Results 2023

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு, இன்று எண்ணப்பட்டன.  கர்நாடக சட்டப்பேரவை பொறுத்தவரை பாஜக ,காங்கிரஸ்,  மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 2615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 

Karnataka Election Results 2023

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 14 பேர் படுதோல்வியை சந்தித்துள்ளனர். 

கர்நாடகாவில் தோல்வி அடைந்த 14 அமைச்சர்கள்


‣கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி - தோல்வி!

‣ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர், டி.கே.சிவகுமாரை எதிர்த்து சன்னபட்னா தொகுதி - தோல்வி! பத்மநாபநகர் தொகுதி - வெற்றி!

‣பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர், பெல்லாரி ஊரகம் - தோல்வி!

‣முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர், பீளகி தொகுதி - தோல்வி!

‣வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் - 2 இடங்களிலும் தோல்வி!

‣டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர், சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி - தோல்வி!

‣ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர், எல்புர்கா தொகுதி - தோல்வி!

‣எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர், ஒசகோட்டை தொகுதி - தோல்வி!

‣கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர், கிருஷ்ணராஜ் பேட் தொகுதி - தோல்வி!

‣பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர், ஹிரேகேரு தொகுதி - தோல்வி!

‣ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர் - சிக்கநாயகனஹள்ளி தொகுதி - தோல்வி!

‣சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, சிர்சி தொகுதி - தோல்வி!

‣பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்- திப்தூர் தொகுதி - தோல்வி!

‣சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர் நாவல்குண்ட் தொகுதி - தோல்வி!