கர்நாடகாவில் நடந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

 
tt

 கர்நாடகா மாநிலம்  ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று திரும்பியபோது விபத்து நிகழ்ந்துள்ளது.  வேனில் சென்ற மேலும் 3 பேர்  காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

accident

ஹாவேரி மாவட்டம் பியாட்கி தாலுகாவில் உள்ள குண்டேனஹள்ளி குறுக்கு அருகே இன்று  அதிகாலை 4 மணியளவில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்த  விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.