பேருந்து தீப்பிடித்ததில் 13 பேர் உயிருடன் எரிந்த சோகம்- கரிக்கட்டையான உடலை பார்த்தும் கதறும் உறவினர்கள்

 
ச்

ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் அருகே தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 13 பேர் உயிருடன் எரிந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவில் பாமூர் நோக்கிச்  40 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து ஆந்திராவில்  பிரகாசம் மாவட்டம், மார்க்காபுரம் அருகே சென்றபோது எதிர்திசையில்  ராயவரம் அருகே உள்ள கல் குவாரியில் இருந்து வந்த ஒரு ட்ரிப்பர் லாரி பேருந்து மீது மோதியதில் நொடியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 13 பயணிகள் உயிருடன் எரிந்தனர். ட்ரிப்பர் லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்கர் வெடித்ததில், நொடிகளில் தீ வாகனம் முழுவதும் பரவியதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் கண்விழிப்பதற்குள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டனர். என்ன நடக்கிறது அறிவதற்கு முன்பே தீ முழுவதும் பரவியது.  சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பித்தாலும், துரதிர்ஷ்டவசமாக பத்து பேர் உள்ளேயே சிக்கி தீயில் உயிரிழந்தனர். 

தகவல் கிடைத்த உடனேயே, தீயணைப்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போனதால், உறவினர்கள் கதறி அழுகின்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு காயமடந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த போக்குவரத்து அமைச்சர் ராம்பிரசாத் உள்துறை அமைச்சர் அனிதாவிற்கு உத்தரவிட்டுள்ளார்.