118 வயதில் 273 வாக்காளர்கள் – சாதனை படைக்க இருக்கும் மக்களவை தேர்தல்

 

118 வயதில் 273 வாக்காளர்கள் – சாதனை படைக்க இருக்கும் மக்களவை தேர்தல்

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா புதிய சாதனையைப் படைக்க உள்ளது. 

பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் வாக்காளர்கள் அஸ்வானி குமார் மற்றும் அக்ஷிதா தவான் ஆகியோரது வயதுகளின் கூட்டுத்தொகை 265 ஆகும். இத்தனை வயதுடைய வாக்காளர்கள் இது வரையிலும் உலகில் வாக்களித்ததே கிடையாது. ஆனால், இது முற்றிலும் தேர்தல் ஆணையத்தின் தவறால் நேர்ந்துள்ளது.

senior voters

இது மட்டும் கிடையாது இந்த நகரில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் 118 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தேர்தல் ஆணையத்தின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர்தான் இது வாக்காளர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்யும் போது ஏற்பட்ட குளறுபடிகளால் ஏற்பட்ட தவறு எனத் தெரிய வந்துள்ளது.

இதனால், ஏப்ரல் 19 -ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருக்கும் மக்களைவைத் தேர்தலில் லூதியானா கிழக்கு தொகுதியில் 118 வயதிற்கு மேற்பட்ட 273 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இதில் சாரதா தேவி என்ற பெண்ணிற்கு அதிகபட்சமாக 145 வயது என பதிவாகி உள்ளது.

இந்தத் தவறை சரி செய்ய தேர்தல் ஆணையம் வேலையைத் தொடங்கி இருக்கிறது. ஆனால், தேர்தல் பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்குள் இந்தப் பணி முடியுமா என்பது சந்தேகம் தான்!