வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா!!

 
Corona

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதன் முன்னெச்சரிக்கையாக சீனா, ஜப்பான் ,தைவான் ,தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓமிக்ரான் பிஎஃப் 7 வகை கொரோனா தற்போது வேகம் காட்ட தொடங்க உள்ளது.

india corona

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 14 பேருக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த 19, 227 பயணிகள் டிசம்பர் 23 முதல் ஜனவரி 3 வரை விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் தரை துறைமுகங்களில் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 124 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.