10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

 
school

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அம்மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலாத்தில் ஆண்டு தோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாநில கல்வி வாரியம் சார்பில் பொது தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே பொது தேர்வு கால அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். இதேபோல் இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணையை மகாராஷ்டிரா மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.. இதன்படி 12-ம் வகுப்பு பொது தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதேபோல 10-ம் வகுப்பு பொதுச்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அம்மாநில கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு தொடர்பான விரிவான கால அட்டவணை மகாராஷ்டிரா மாநில கல்வி வாரிய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.