100 சதவீதம் மின்சார ரெயில்களாக மாறும் இந்திய ரெயில்வே – உலக அளவில் புதிய சாதனை முயற்சி

 

100 சதவீதம் மின்சார ரெயில்களாக மாறும் இந்திய ரெயில்வே – உலக அளவில் புதிய சாதனை முயற்சி

வருகிற 2030-ம் ஆண்டை இலக்காக வைத்து இந்திய ரெயில்வேத் துறை பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. புவி வெப்பமயமாவதை தடுக்கும் பொருட்டு “பசுமை ரயில்வே” என்ற புதிய திட்டத்தை களமிறக்கியுள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் பழைய டீசல் ரெயில்கள் அனைத்தும் மாற்றப்பட்டு முழுக்க,முழுக்க மின்சார ரெயில்களே இயங்கும். இதன் மூலம் உலகின் முதல் பசுமை ரயில்வே என்ற பெருமை இந்தியாவைச் சேரும்.

100 சதவீதம் மின்சார ரெயில்களாக மாறும் இந்திய ரெயில்வே – உலக அளவில் புதிய சாதனை முயற்சி


அந்த வகையில் இதுவரை 40,ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரூட் கிமீ மின்மயமாக்கலை முடித்துள்ளது, டிசம்பர் 2023-க்குள் பிராட் கேஜ் (பிஜி) நெட்வொர்க்கில் உள்ள அனைத்து வழிகளையும் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதிருக்கும் சுமார் 2700 டீசல் என்ஜின்கள் அனைத்தும் படிப்படியாக மின்சார என்ஜின்களாக மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது. வரும் 2022- டிசம்பருக்குள் 100 சதவீதம் மின்மயமாக்கலை முடித்து அடுத்த 2030-க்குள் அனைத்து விதமான திட்டங்களும் முடிக்கப்பட்டு இந்திய ரெயில்வே உலகின் உன்னமான இடத்தைப் பிடிக்க காத்திருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ்