புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்!!
Tue, 24 Jan 20231674535648073

புதுச்சேரியில் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்காக 21 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க தகுதியான குடும்பத்தலைவிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் மாநில முழுவதும் சுமார் 71 ஆயிரம் பேர் தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டனர்.
அதன்படி இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தை நேற்று மாலை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.