தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த நாளில் 100 நாய்கள் மாயம் - பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

 
பி

தொண்டர்களுக்கு கட்சி சார்பில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரியாணி விருந்து வைத்து அதே  நாளில் நூற்றுக்கணக்கான நாய்கள் காணாமல் போயிருக்கின்றன.  அப்படி என்றால்  நாய்களைக் கொண்டு அந்த  இறைச்சியை பிரியாணி செய்து பரிமாறி இருக்கிறார்கள்.  இதன் மூலம் நோய்கள் பரவுமா என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது பாஜக.

 பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  ஐக்கிய ஜனதா தள கட்சியின் பீகார் மாநில தலைவர் லாரன்ஸ் சிங்.  இவர் முங்கர் நகரில் தனது கட்சி தொண்டர்களுக்கு அண்மையில் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார்.  இந்த பிரியாணி விருந்து குறித்து பீகார் மாநில பாஜக தலைவர் விஜய் குமார் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு இருக்கிறார்.  இதனால் இந்த விவகாரம் அம் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ப்ஜ்

 ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வைக்கப்பட்ட அதே நாளில் நூற்றுக்கணக்கான நாய்கள் காணாமல் போய் இருப்பதாக மக்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.    ஐக்கிய ஜனதா ஜள தலைவர் விருந்துக்கு ஏற்பாடு செய்ததிலிருந்து நகரத்திலிருந்த நாய்களைக் காணவில்லை என்று புகார் கூறியிருக்கிறார்கள்.  இதனால் தான் பிரியாணியில் நாய்களைக் கொன்றுஅதன் இறைச்சிகளை வைத்து சமைத்திருக்கிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.   இதனால் தொண்டர்களுக்கு என்ன நோய் பரவுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.    அது மட்டுமல்லாமல் விருந்தில் மது பரிமாறப்பட்டதா இல்லையா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.  இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

 விஜய்குமார் சின்காவின் இந்த குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  இதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக்ஸா,   விஜயகுமார் சின்கா தனது சொந்த விருந்தில் மக்களுக்கு எந்த விலங்கின் இறைச்சியை பரிமாறுகிறார் என்பதை அவரே சொல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.   மேலும்,   விஜய்குமார் சிங் மனநிலை சரியில்லாதவர் என்றும் கடுமையாக சாடி இருக்கிறார்.