குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் இன்று தொடக்கம்!!

 
rb

கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் இன்று தொடங்குகிறது. 

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் கிரக ஜோதி என்னும் இலவச 200 அலகு மின்சார திட்டம்,  கிரகலட்சுமி என்னும் குடும்ப தலைவிகளுக்கு 2000 மாதம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை அடங்கும். அந்த வகையில் கிரக ஜோதி திட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் கிரகலட்சுமி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலின் போது  காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியாக அளித்த ஐந்து திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. 

Rs 2k to every woman household head': Priyanka Gandhi launches Karnataka  Cong's scheme | The News Minute
 
அந்த வகையில் கர்நாடக மாநில அரசின் சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்ட துவக்க விழா இன்று மைசூரில் நடைபெறுகிறது.பிபிஎல் ,ஏபிஎல், ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 நிதி உதவி பெறும் கிரகலட்சுமி திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  குடும்பத்தில் யாராவது வருமான வரி ,ஜிஎஸ்டி கட்டுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Rahul

 காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை  வயநாடு எம்பி ராகுல் காந்தி இன்று  தொடங்கி வைக்கிறார் . இத்திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் பயன் பெற உள்ளனர்.