காய்ச்சலால் மகள் பலி - மருத்துவரை வெட்டிய தந்தை
கேரளா மாநிலம் கோழிக்கோடு, தாமரசேரி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோட்டின் தாமரச்சேரியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் நோயால் இறந்த ஒன்பது வயது சிறுமியின் தந்தை, சிகிச்சை அளித்த மருத்துவரை அரிவாளால் வெட்டினார். மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து மருத்துவரை வெட்டிய சனூப் என்பவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆபத்தான அமீபா தொற்று காரணமாக உயிரிழந்த தனது மகளின் மரணத்திற்கு மருத்துவர் தான் காரணம் என்று சனூப், இந்த தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சனூப் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


