தேஜாஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணம்…!

 

தேஜாஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணம்…!

கோவாவில் தயாரிக்கப்பட்டு மணிக்கு 2,205 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய தேஜாஸ் போர் விமானத்தில்
தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவில் முழவதுமாக தயார் செய்யப்பட்ட  தேஜாஸ் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் செய்தார்.

விமானப் படையின் தேஜாஸ் போர் விமானம் கோவாவில் தயாரிக்கப்பட்டது. இது மணிக்கு 2,205 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது. இதில் பயணம் செல்ல உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். பயணம் சிரமமின்றி எளிதாக அமைந்தது - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூருவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கண்காட்சி ஒன்றை இன்று நடத்தியது. அதன் பின் தேஜாஸ் போர் விமானத்தில் பயணம் செல்ல விமானப்படையினர் உடையில் ஆயத்தமானார் அமைச்சர் ராஜ்நாத் சிங். முழுவதும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட இரண்டு இருக்கைகள் கொண்ட  தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றார் ராஜ்நாத் சிங். மணிக்கு 2,205 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய தேஜாஸ் போர் விமானம்

இந்த பயணம் சிரமமின்றி எளிதாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். 68 வயதில் இத்தகைய போர் விமான்த்தில் பயணித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.