கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,274ஆக உயர்வு…. பலி எண்ணிக்கை 149ஆக அதிகரிப்பு

 

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,274ஆக உயர்வு…. பலி எண்ணிக்கை 149ஆக அதிகரிப்பு

நம் நாட்டில் தொற்று நோயான கொரோனா வைரசுக்கு இதுவரை (நேற்று) பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,274ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதுமாக 21 நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வரும் 14ம் தேதி இந்த ஊரடங்கு முடிவடையும். ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பலியானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

நம் நாட்டில் நேற்று வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,274ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று நோய்க்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று நோயின் அதிகரித்து வருவதால் தற்போது நடைமுறையில் உள்ள லாக் டவுன் மேலும் பல வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளளது.

நோயாளிகளை பரிசோதனை செய்யும் மருத்துவர்

கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் குறித்த பயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தொற்று நோய் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் அவை எல்லாம் பலனை கொடுக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.