கேரளாவில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 126 ஆக உயர்வு!!

 

கேரளாவில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 126 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனா வைரஸா 14 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தந்த மாநில அரசும் மத்திய அரசும் கொரோனாவை எதிர் கொள்ள பல்வேறு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

pinarayi vijayan

இந்நிலையில் கேரளாவில் மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.