எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் "தகுதியற்றவர்கள்" என அறிவிக்கப்படுகிறார்கள் - நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு

 
Parliament

AIIMSல் உள்ள SC/ST வகுப்பினரின் வாய்ப்புகளை மேம்படுத்த, தேர்வுக்குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று  SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

Parliament

"இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை AIIMS, IIM, IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு "தகுதியற்றவர்கள்" என எந்த காரணமும் இன்றி வேண்டுமென்றே அறிவிக்கப்படுகிறார்கள். இது தேர்வுக் குழுக்களின் பாரபட்சம், சார்பு நிலையை வெளிக்காட்டுகிறது. போதுமான எண்ணிக்கையில் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்ற அரசாங்கத்தின் "பொதுவான" பதிலை ஏற்க விரும்பவில்லை"
என்று மக்களவையில் SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டியுள்ளது.

Parliament

ஆசிரியர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்கள் எவரும் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, AIIMSல் உள்ள SC/ST வகுப்பினரின் வாய்ப்புகளை மேம்படுத்த, தேர்வுக்குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.