ஆன்லைனில் ஆபாச சாட் செய்ய மாதம் ரூ. 80000 செலவழித்த நபர்

ஆன்லைனில் ஆபாச சாட் செய்ய மாதம் ரூ. 80000 செலவழித்த நபர்

ஆன்லைன் ஆபாசத்திற்கு அடிமையாகிய மூன்று நபர்கள் ஆண்கள் மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்., கடந்த எட்டு மாதங்களில் இது போன்று மூன்று நபர்கள் ஆன்லைன் ஆபாச போதைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று நோயாளிகளுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர். நிபுணர்களின் கூற்றுப்படி, வெப்கேம் மூலம் தான் அதிக பாலியல் சாட்கள் மற்றும் பாலியல் போதைக்கு ஆளாவதாக கூறினர் . இன்டெர்நெட் அடிக்ஷன் என்றும் குறிப்பிடப்படும்  இந்த சைபர்செக்ஸ் போதை என்பது பாலியல் இன்பத்தைப் பெறுவதற்கு இந்த மாதிரி ஊடகங்களை பயன்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

webcam-chat

பெங்களூரில் திருமணமாகாத நபர் ஒருவர் சைபர்செக்ஸ் போதைக்கு மட்டும் மாதத்திற்கு ரூ.80,000 வரை செலவளித்துள்ளார். திருமணமாகாத அந்த நபர் வெப்கேம் மாடல்களைப் பார்க்க அனுமதிக்கும் டோக்கன்களை வாங்க பணத்தை இவளவு பணத்தை செலவிட்டுள்ளார்.

அந்த நபர் பாலியல் இன்பத்தைத் தேடுவதற்காக வெப்கேம் மாடல்களை பார்க்கத் தொடங்கி இறுதியில் சைபர்செக்ஸிற்கு அடிமையாகிவிட்டார்.

அந்த நபர் பணம் இல்லாமல் தவித்ததை கவனித்த போது தான் அவர் இப்படி ஓரி விசயத்திற்கு அடிமையாகியிருக்கிறார் என்பது அவரது குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. அந்த நபர் கை நிறைய சம்பாதித்திருந்தாலும், பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் அவர்மீது குடும்பத்திற்கு சந்தேகம் வரத்தொடங்கியது. இதனால் கடன் வாங்கி இன்பம் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை மனநல மருத்துவரிடம் சிகிசைக்கு அனுப்பினர்.