அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு! அரசு அதிரடி

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு! அரசு அதிரடி

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தால் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தால் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கடுவால் மற்றும் குமாவன் ஆகிய மாவட்டங்கள் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்த மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்துவருவதாக புகார் எழுந்தது. இதற்கு ஆசிரியர் சரிவர பாடம் எடுக்காததே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் பல ஆசிரியர் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்ளதாகவும், பணிக்கு சரிவர வராமல் வேலையும் செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக உத்தராகண்ட் மாநில பள்ளிக் கல்வித் துறை ஒரு முடிவு எடுத்துள்ளது.  

ஆசிரியர்

இதன்படி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமானவர்கள் மற்றும் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. இதையடுத்து சில மாதங்களாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் இருந்த 26 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.