சீனா எதிர்த்தாலும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்தபோவதில்லை… மத்திய அரசு

சீனா எதிர்த்தாலும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்தபோவதில்லை… மத்திய அரசு

இந்திய ராணுவம் லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் சில பகுதிகளில் இருநாட்டு வீரர்களும் நேரடியாக கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் லடாக் எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் வீரர்களை குவித்து வருகிறது.

சீனா எதிர்த்தாலும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்தபோவதில்லை… மத்திய அரசு

இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படை தலைவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். .இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் நேற்று மத்திய அரசு சீனாவுக்கு ஒரு கடினமான செய்தியை கொடுத்துள்ளது.

சீனா எதிர்த்தாலும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்தபோவதில்லை… மத்திய அரசு

எல்லைக் கட்டுப்பாடடு பகுதிகளில் அமைந்துள்ள மூலோபாய பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதை இந்தியா ஒரு போதும் நிறுத்தாது என டெல்லி தலைமை முடிவு எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இன்று ராணுவ உயர் தளபதிகளின் மூன்று நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் கிழக்கு லடாக்கில் உருவாகி வரும் நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-சீனா இடையெ 3,488 கி.மீ்ட்டர் தூரத்துக்கு எல்லைக்கோடு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக எல்லை பகுதிகளில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.