3வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 227 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

 

3வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 227 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்தப் போட்டியில் இந்திய அணி 5 புதுமுக வீரர்கள் உட்பட 6 வீரர்களை மாற்றம் செய்தது. அதன்படி, சஞ்சு சாம்சன்,ராகுல் சாகர், கிருஷ்ணப்பா கௌதம், நிதிஸ் ராணா மற்றும் சேட்டன் சக்காரியா ஆகிய 5 புதுமுக வீரர்கள் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் ஒரே போட்டியில் 5 புதுமுக வீரர்களை களமிறக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

3வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 227 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் 11 ரன்கள் குவித்து அதிரடியாக துவங்கியது இந்திய அணி. அகிலா தனஞ்சயாவின் இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஷிகர் தவான் , ஆட்டத்தின் 3வது ஓவரில் சமீராவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பனுகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு பிரித்திவி சா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். 14.5 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடி வந்த பிரித்திவி சா 49 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தும் , சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

3வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 227 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா


அடுத்து வந்த சூரியகுமார் யாதவும் 17 ரன்களில் எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 47 ஓவர்களாக மாற்றப்பட்டு மழை நின்ற பிறகு தொடர்ந்து நடைபெற்றது. அதன் பின் வந்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். சூரியகுமார் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். 43 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை எட்டியது. இலங்கை அணி தரப்பில் அகில தனஞ்சய மற்றும் ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.