3வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்திய இலங்கை

 

3வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்திய இலங்கை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

3வது ஒருநாள் போட்டி: இந்தியாவை வீழ்த்திய இலங்கை

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 23 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 147 என்ற நல்ல நிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது ஆட்டம் 47 ஓவராக குறைக்கப்பட்டு மீண்டும் தொடர இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர்.43.1 ஓவர் முடிவில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் பிரித்திவி சா 49 ரன்களும்,சஞ்சு சம்சன் 46 ரன்களும், சூரியகுமார் யாதவ் 40 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் அகில தனஞ்சய மற்றும் ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 47 ஓவர்களில் 227 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பனுகா 7 ரன்களில் ஆட்டமிழக்க , அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் ராஜபக்சா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடி வந்த ராஜபக்சா 56 பந்துகளில் 65 ரன்கள் குவித்து சர்க்காரியா ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த தனஞ்சய டி சில்வா, அசலங்கா மற்றும் கேப்டனாக சனகா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


ஆரம்பத்திலிருந்து சிறப்பாக ஆடி வெற்றியின் அறிய கொண்டு வந்த அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 39 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று இருந்ததால் இந்தத் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.